“அதி தீவிரமாக தொற்றக்கூடிய” ஒமிக்ரோன் கொவிட் மாறுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கட்டாய தடுப்பூசி திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளும் பூஸ்டர் டோஸ்களை வழங்குவதோடு, நாடுகளுக்கு இடையேயான பயணத்தின்போதும் பிசிஆர் பரிசோதனைகளை தற்காலிகமாக செயல்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு கிரேக்க அரசாங்கத்தை போன்று அபராதம் விதிக்கப்படாத போதும் அதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என வான் டெர் லேயன் தெரிவித்தார்.
இதனிடையே அண்டை நாடான ஆஸ்திரியா பெப்ரவரியில் இருந்து கட்டாய தடுப்பூசியை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது.