
பல பில்லியன் பெறுமதியான உலகளாவிய முதலீட்டுத் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ளது.
சீனாவின் பெல்ட் என்ட் ரோட் முதலீட்டுத் திட்டத்துக்குப் போட்டியாகவே ஐரோப்பிய ஒன்றியம் புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
உலக நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய முதலீட்டுத் திட்டம் முன்வைக்கப்படுவதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஊர்சுலா வோன் தெரிவித்துள்ளார்.
புதிய முதலீட்டுத் திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையிலிருந்து பில்லியன் கணக்கான யூரோக்களைத் திரட்ட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல், போக்குவரத்து, பருவநிலை மாற்றம் மற்றும் வலுசக்தி துறைகளில் முதலிட எதிர்பார்ப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.