January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு: மாணவர்கள் மூவர் பலி!

அமெரிக்காவின் மிச்சிக்கன் மாநிலத்திலுள்ள பாடசாலை ஒன்றில் நபரொருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்தில் பாடசாலையின் ஆசிரியர் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்துள்ளதாக மிச்சிக்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பாடசாலையில் கற்கும் 15 வயது மாணவன் ஒருவனே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை நோக்கி 15 தொடக்கம் 20 தடவைகள் சூட்டை நடத்தியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் அந்த மாணவன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

என்ன காரணத்திற்காக அவர் அவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் என்ற தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.