May 24, 2025 14:29:59

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டை முடக்க வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை’: அமெரிக்கா

அமெரிக்காவிலும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டை முடக்கவேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் பரவல் அச்சம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டு, முகக் கவசம் அணிந்து இருந்தால், நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்படாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒமிக்ரோன் பரவல் குறித்த கவலைப்பட வேண்டியிருந்தாலும், பீதியடையத் தேவையில்லை என்று ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வைரஸ் திரிபு தொற்றுக்கு உள்ளானவர்கள் வட அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளனர்.