‘ஒமிக்ரோன்’ வைரஸ் பரவலைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளை நீக்கும்படி அந்நாட்டு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒமிக்ரோன் வைரஸ் பரவலைத் தொடர்ந்து உலகின் அதிகமான நாடுகள் தென்னாபிரிக்கா மற்றும் அதன் அயல் நாடுகள் மீது பயணத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில், தம்மீதான பயணத் தடைகளை தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ராமபோசா கண்டித்துள்ளார்.
பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் தென்னாபிரிக்கா மீது பயணத் தடை விதித்துள்ளன.
தென்னாபிரிக்காவில் நாளாந்தம் 500 க்கு அதிகமானோர் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளாகின்றனர்.