உலக நாடுகளில் ‘ஒமிக்ரோன்’ வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை முற்றாக தடை செய்ய ஜப்பான் தீர்மானித்துள்ளது.
ஜப்பான் அதன் அனைத்து எல்லைகளையும் மூடுவதாக பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
நாளை முதல் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை தடை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக பயணத் தடை விதிக்கும் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மூன்றாவது நாடாக ஜப்பான் கருதப்படுகிறது.
கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன், பல்வேறு நாடுகளிலும் தீவிரமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.