May 23, 2025 21:15:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டின் சர்வதேச விமான நிலையத்தை சீனாவிடம் இழக்கும் உகாண்டா!

சீனாவிடமிருந்து பெற்றக் கடனை மீளச் செலுத்த முடியாத காரணத்தினால் நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையமான எண்டெபெ விமான நிலையத்தை இழக்கும் நிலைக்கு உகாண்டா தள்ளப்பட்டுள்ளது.

கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாததால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவிகளை உகாண்டா கோர முடியாத நிலை உள்ளது.

குறித்த விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சீனா அரச வங்கியின் ஊடாக 2 வீத வட்டிக்கு 2015 ஆண்டளவில் 207 மில்லியன் டொலரை உகாண்டா அரசாங்கம் கடனாக வாங்கியுள்ளது.

இந்நிலையில் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைமையில் உகாண்டா அரசாங்கம் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடனை செலுத்த முடியாமல் போனால் ‘எண்டெபெ’ விமான நிலையத்தை சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று கடன் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஒப்பந்தத்தில் உள்ள அந்த விதியை நீக்க வேண்டும் என்று உகாண்டா அரசாங்கம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும், அதனை ஏற்க சீனா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் உகாண்டாவின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் சீனா வசம் செல்வது உறுதியாகி உள்ளது.

அதேசமயம், உகாண்டா விமான நிலையத்தை சீனா கையகப்படுத்துவதாக வெளியான தகவலை உகாண்டாவின் விமானப் போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.