வெளிநாட்டு பயணிகள் தமது நாட்டுக்குள் வருவதை இஸ்ரேல் 14 நாட்களுக்குத் தடை செய்துள்ளது.
அதிக வீரியத்தன்மை கொண்ட ‘ஒமிக்ரோன்’ வைரஸ் பரவல் அபாயம் காரணமாக இஸ்ரேலின் அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கான தடையை இஸ்ரேல் அமுல்படுத்துகிறது.
இஸ்ரேலில் ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் கண்டறியப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்க நாடுகளில் ஒமிக்ரோன் திரிபு அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தென்னாபிரிக்கா மற்றும் அதன் அயல் நாடுகள் மீது பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.