கறுப்பினத்தை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தினை தொடர்ந்து அமெரிக்காவின் பிலெடெல்பியாவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
வோல்டர் வலஸ் என்பவர் தங்களை நோக்கி கத்தியுடன் முன்னோக்கி வந்ததை தொடர்ந்து அவரை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாரின் வாகனங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ மூட்டியுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்ததன் காரணமாக 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள்,
பலரை கைதுசெய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.