July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்காவிலிருந்து நெதர்லாந்து வந்த விமானங்களில் 60 பேருக்கு கொவிட் தொற்று!

தென்னாபிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமுக்கு வந்த விமானத்தில் அறுபத்தொரு பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இவர்களுக்கு கொவிட் வைரஸின் புதிய மாறுபாடு உள்ளதா என்பது தொடர்பில் மேலதிக பரிசோதனையை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு கொவிட் தொற்று உறுதியானவர்கள் ஷிபோல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

600 பயணிகள் கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து பல மணிநேரம் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

நவம்பர் 24 அன்று தென்னாபிரிக்காவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்திற்கு இந்த மாறுபாடு தொடர்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெள்ளிக்கிழமை பெயரிடப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகள் தென்னாபிரிக்க நாடுகளுக்கான போக்குவரத்துக்களை கட்டுப்படுத்தியுள்ளன. நெதர்லாந்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தடுப்பூசியின் செயற்திறனை தோற்கடிக்கும் என விஞ்ஞானிகளினால் எச்சரிக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் மாறுபாடு கவலையை ஏற்படுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.