February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய கொவிட் வைரஸ் மாறுபாட்டால் தங்கத்தின் விலையும் உயர்வு!

ஆபிரிக்க நாடுகளில் பரவும் புதிய கொவிட் மாறுபாடான ‘ஒமிக்ரோன்’ காரணமாக உலக நாடுகள் மீண்டும் ஒரு முடக்கத்தினை எதிர்கொள்ளும் அபாயம் தோன்றியுள்ளது.

இதன் காரணமாக உலக சந்தையில் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இதன்படி உலகளவில் தங்கத்தின் விலையும் உயர்வடைந்துள்ளது.

அதன்படி ஒரு அவுன்ஸ் (26) தங்கத்தின் விலை சுமார் 20 அமெரிக்க டொலர்களினால் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக  தங்கத்தின் விலை  1,804  அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

எனினும், கடந்த 24 ஆம் திகதி வரை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிவடைந்து வந்துள்ளதை goldprice.org இணையத்தளத்தின் வரைபு காட்டுகின்றது.

எனினும் இதன் பின்னர் சடுதியாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமைக்கு புதிய கொவிட் மாறுபாடின் பரவல் காரணம்  என தெரிவிக்கப்படுகின்றது.