November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்காவிற்கான விமான போக்குவரத்துகளை கட்டுப்படுத்தியது அமெரிக்கா!

கொரோனா வைரஸின் புதிய  மாறுபாடு காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்து அமெரிக்காவும் தென்னாபிரிக்காவிற்கான விமான போக்குவரத்துகளுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இதன்படி, திங்கட்கிழமை முதல் தென்னாபிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, லெசோதோ, ஈஸ்வதினி, மொசாம்பிக் மற்றும் மலாவி ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் தடை செய்யப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் திங்கட்கிழமை முதல், அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் மட்டும் இப்பகுதிகளில் இருந்து நாட்டுக்குள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், இது ஒரு “முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது கொவிட் வைரஸின் புதிய மாறுபாடு பற்றி மேலதிக ஆய்வுகள் வெளிவரும் வரை அமுலில் இருக்கும் என்றார்.

உலக சுகாதார ஸ்தாபனம் புதிய மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டமை “கவலைக்குரியது” என்று நேற்று (26) அறிவித்தது. இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.