November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய கொவிட் வைரஸ் வகைக்கு உத்தியோகபூர்வ பெயரை அறிவித்தது உலக சுகாதார ஸ்தாபனம்!

தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொவிட் 19 வைரஸின் புதிய மாறுபாடான B.1.1.529 உலக சுகாதார ஸ்தாபனத்தினால் “ஓமிக்ரோன்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ பெயரை உலக சுகாதார ஸ்தாபனம் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை முழுயைாக எதிர்க்கும் என தெரிவிக்கப்படும் இந்த புதிய வைரஸ் மாறுபாடு வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம்  சிறப்புக் கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தியுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து வைரஸின் புதிய மாறுபாட்டிற்கு “ஓமிக்ரோன்” என பெயரிடப்பட்டுள்ளது.

இதனிடையே தென்ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை தடை விதித்துள்ளன.

முன்னதாக இங்கிலாந்தும் தென்ஆபிரிக்க பிராந்திய நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்தது.

ஐரோப்பாவை தொடர்ந்து சிங்கப்பூரும், தென்ஆபிரிக்கா, போட்ஸ்வானா, எஸ்வாத்தினி, லெசோத்தோ, மொசாம்பிக், நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 7 நாடுகளின் விமானங்கள் தரை இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.