October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்; அவதானமாக இருக்குமாறு பிரஜைகளுக்கு பிரான்ஸ் அறிவிப்பு

முகமது நபி குறித்த கேலிச்சித்திரம் குறித்த சீற்றம் உலக நாடுகளில் அதிகரித்துள்ளதை தொடர்ந்து முஸ்லீம் நாடுகளில் வாழும் அல்லது அந்த நாடுகளிற்கு செல்லும் தனது பிரஜைகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தோனேசியா, ஈராக், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள தனது பிரஜைகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

முகமது நபி குறித்த கேலிச்சித்திரம் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளை பிரான்ஸ் பிரஜைகள் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயணங்களின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள் என பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, உலகின் பல நாடுகளில் இன்றும் பிரான்ஸின் பொருட்களை புறக்கணிக்கவேண்டும் என கோரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பிரான்ஸ் ஜனாதிபதியின் உருவபொம்மைகளுக்கு தீயிட்டு தங்களுடைய எதிர்ப்பை காட்டியிருந்த அதேவேளை,பிரான்ஸ் தூதரகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.