July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாப்பிரிக்காவில் அச்சுறுத்தலான கொவிட் திரிபு கண்டுபிடிப்பு!

File Photo

தென்னாப்பிரிக்காவில் கொவிட் 19 வைரஸின் புதிய மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகளாவி கொவிட் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வருவதாக கூறப்பட்டு வந்த போதிலும், புதிய வைரஸ் மாறுபாடுகள் குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் தென்னாப்பிரிக்காவில் கொவிட் 19 வைரஸின் புதிய மாறுபாடு பற்றி ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள செய்தி சுகாதார அதிகாரிகளை பொதுமக்களையும் மேலும் அச்சமடையச் செய்துள்ளது.

தென்னாபிரிக்காவில் கொவிட் தொற்றுக்குள்ளான 20 பேரின் மாதிரிகளில் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய மாறுபாடு B.1.1.529 என பெயரிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு உலக சுகாதார ஸ்தாகனம் உத்தியோக பூர்வ பெயரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

60 மில்லியன் மக்கள் வசிக்கும் தென்னாப்பிரிக்காவில் 20 பேரிடம் புதிய தொற்று கண்டறியப்பட்டமை ஒப்பீட்டளவில் பெரிய பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், தென்னாப்பிரிக்காவில் தினசரி கொவிட் தொற்றாளர்களிடையே புதிய கொவிட் மாறுபாடு அதிகரித்து வருவதால் இது இன்னும் சக்திவாய்ந்த விகாரமானதாக இருக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.