சுவீடனின் முதலாவது பெண் பிரதமராக மெக்டலீனா என்டர்சன் பதவியேற்று சில மணித்தியாலங்களில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மெக்டலீனா என்டர்சன் பிரதமராகப் பதவியேற்று சில மணித்தியாலங்களில் கூட்டணிக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளது.
இதனால், பிரதமர் மெக்டலீனா என்டர்சன் முன்வைத்த வரவு செலவுத் திட்டமும் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மெக்டலீனா என்டர்சன் முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு உடன்பாடு இல்லாத காரணத்தினால் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக க்ரீன் கட்சி தெரிவித்துள்ளது.
புதிய பிரதமரின் வரவு செலவுத் திட்டத்தில் குடியேற்ற எதிர்ப்பு அம்சமும் உள்ளடங்கி இருந்துள்ளது.
வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தான் இராஜினாமா செய்வதாக புதிய பிரதமர் மெக்டலீனா என்டர்சன் சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
நோர்டிக் நாடுகளில் பெண் ஒருவர் பிரதமராக பதவி வகிக்காத ஒரே நாடாக சுவீடன் விளங்கியதோடு, சுவீடனில் பதவிக்கு வந்த முதலாவது பெண் பிரதமரும் சில மணித்தியாலங்களில் பதவி விலகியுள்ளார்.