ஆங்கிலக் கால்வாயில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 31 பேர் மரணமடைந்துள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் நீரிணையே ஆங்கிலக் கால்வாய் ஆகும்.
34 புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரிட்டனை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போதே, இவ்வாறு படகு கவிழ்ந்துள்ளது.
விபத்தில் இருவர் உயிர் தப்பியுள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளார்.
உயிரிழந்த 27 பேரின் உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் கடல் பாதுகாப்புப் படையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் அண்மையில் எதிர்கொண்ட மிக மோசமான துயராக இதனைக் கருத முடியும் என்று பிரான்ஸின் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.