
2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஐரோப்பா பிராந்தியத்தில் 7 இலட்சம் கொவிட் மரணங்கள் பதிவாகும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.
குளிர் காலம் கொரோனா பரவலை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
ஐரோப்பா பிராந்தியமாகக் கருதப்படும் 53 நாடுகளில் இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக 15 இலட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சில நாடுகள் மீண்டும் முடக்க நிலையை அறிவித்துள்ளதோடு, புதிய ஒழுங்கு விதிகளையும் அமுல்படுத்த ஆரம்பித்துள்ளன.
தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை வழங்க அதிகமான நாடுகள் ஆரம்பித்துள்ளன.
ஆசிய நாடுகளுக்கும் இதே அபாயம் தொடர்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.