July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அணுவாயுத திட்டம்: இஸ்ரேல்- ஈரான் முரண்பாடு அதிகரிக்கிறது

file photo: Twitter

ஈரானுடனான தமது மோதலை தீவிரப்படுத்த தயாராகி வருவதாக இஸ்ரேலின் பிரதமர் நப்தாலி பென்னட் சமிக்ஞை காட்டியுள்ளார்.

ஈரான் உலக நாடுகளுடன் புதிய அணுவாயுத ஒப்பந்தத்துக்குத் தயாராக வரும் நிலையில், இஸ்ரேல் அதனை எதிர்த்துள்ளது.

ஈரானுடன் உலக வல்லரசுகள் செய்துகொள்ளும் எந்தவொரு அணுசக்தி ஒப்பந்தத்துக்கும் தாம் கட்டுப்படுவதில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தாம் எவ்வித அணுவாயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை என்று ஈரான் மறுப்புத் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் முறிந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஈரான் மீதான தடைகளைத் தளர்த்துவதற்கும் புதிய நிபந்தனைகளுடன் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கும் பைடன் நிர்வாகம் தயாராகி வருகிறது.

எனினும், ஈரான் தமது நிபந்தனைகளுக்கு இணங்குவதாகத் தெரியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முன்னெடுப்புகளுக்கு இஸ்ரேல் மறைமுகமான எதிர்ப்புகளை வெளியிட்டு வருகிறது.