May 23, 2025 16:40:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கேரிய பஸ் விபத்து; 12 சிறுவர்கள் உட்பட 46 பேர் மரணம்

பல்கேரியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 12 சிறுவர்கள் உட்பட 46 பேர் மரணமடைந்துள்ளனர்.

பல்கேரியாவின் தென் மேற்கு நகரமான சோபியாவின் நெடுஞ்சாலையில் இந்த பஸ் விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ் வீதியில் இருந்து விலகி, மோதி, தீப்பிடித்துள்ளதாக மேற்கு பல்கேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்று, திரும்பும் போதே, பஸ் விபத்து ஏற்பட்டுள்ளது.

பஸ்ஸில் இருந்தவர்கள் எரிந்து, உயிரிழந்துள்ளனர்.

எரி காயங்களுடன் 7 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் உட்பட ஏனைய 46 பேரும் உயிரிழந்துள்ளனர்.