June 17, 2025 16:44:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெர்மனியில் கொரோனா: ‘குளிர்கால நிறைவில் சகலரும் குணமடைந்தோ, மரணமடைந்தோ இருப்பார்கள்’

குளிர் காலம் நிறைவடையும் போது ஜெர்மனியில் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டோ, கொரோனாவில் இருந்து குணமடைந்தோ அல்லது கொரோனாவால் மரணமடைந்தோ இருப்பார்கள் என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனியில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், குளிர் காலத்தையும் எதிர்நோக்கியுள்ளது.

குளிர் காலத்தில் கொரோனா பரவல் தீவிரமடையும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜெர்மனி சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பாவில் குறைந்தளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நாடாக ஜெர்மனி கருதப்படுகிறது.