ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதற்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
புதிய விதிகளின்படி பெண்கள் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் திரையில் தோன்றும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் எந்த வகையான முகக்கவசம் அணிய வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அதிகரித்து வருகின்றனர்.
பெண்களின் பாடசாலை கல்வி மற்றும் தொழில்களுக்கு செல்வதிலிருந்து தலிபான்கள் கடுமையான கடடுப்பாடுகளை விதித்துள்ளனர்.
1990 களில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த போது, பெண்கள் கல்வி பயிலவும் தொழில் புரிவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.