சீனாவின் முன்னாள் துணை அதிபர் ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள டென்னிஸ் வீராங்கனை பெங் ஷாய், பாதுகாப்பாக இருக்கிறாரா என்று பலரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷாய் தன் நண்பர்களுடனும், பயிற்றுநருடனும் வெளியே சென்று உணவருந்துவது போன்ற இரு காணொளிகளை சீன ஊடகமான்று வெளியிட்டுள்ளது.
எனினும் அந்த காணொளி அவரின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமானது என பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தலைவர் ஸ்டீவ் சிமோன் கூறியுள்ளார்.
”அவர் பாதுகாப்பாப இருப்பதாக காணொளியை வெளியிட்டிருந்தாலும், அவர் எந்தவித அழுத்தங்களின்றி சுதந்திரமாக இருக்கின்றாரா? என்பது இன்னும் தெளிவாகவில்லை” என்று ஸ்டீவ் சிமோன் தெரிவித்துள்ளார்.
35 வயதான பெங் ஷாய், சில வாரங்களுக்கு முன்னர், முன்னாள் சீன துணை அதிபர் ஜாங் ஜி ஓர்லி மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
முன்னாள் துணை அதிபர் தன்னை பல ஆண்டுகளாக பலவந்தப்படுத்தி வந்ததாக சமூக வலைத்தளம் ஊடாக கடந்த நவம்பர் முதல் வாரத்தில் அவர் தகவல் வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து டென்னிஸ் வீராங்கனை பெங் ஷாய் காணாமல் போயிருந்தார். அவர் தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில் அவரின் பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இவ்வாறான நிலைமையில் சீன அரச ஊடகமொன்று அவர் பாதுகாப்பாக இருப்பதாக காணொளியொன்றை வெளியிட்டிருந்தது.