ஈரானின் அணுவாயுத முயற்சிகளைத் தடுப்பதாக அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு பிரதானி உறுதியளித்துள்ளார்.
வருடாந்த மனாமா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பஹ்ரைனுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒட்டின் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக வல்லரசுகளுடன் ஈரானின் அணுவாயுத உருவாக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் முயற்சிகளைத் தடுப்பதாக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் அரபு நட்பு நாடுகளுக்கே, லொய்ட் ஒட்டின் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
ஈரானின் யுரேனிய செறிவூட்டலை மட்டுப்படுத்துவதற்கும், ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்குவதற்குமான புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பைடன் நிர்வாகம் முயற்சிக்கிறது.
சீனா மற்றும் ரஷ்யாவின் சவால்களை எதிர்கொள்வதற்கான சக்திகளை அமெரிக்கா ஒன்றுதிரட்ட முயற்சிக்கிறது.
ஈரான் அமெரிக்காவுடன் இணங்குவதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தாம் கவனம் செலுத்துவதாகவும் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.