நெதர்லாந்தில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அமுல்படுத்தப்படும் முடக்க நிலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய முடக்க நிலை அமுல்படுத்தப்படுவதாக நெதர்லாந்து அறிவித்ததைத் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொலிஸ் வாகனங்களுக்கு கல்வீச்சு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான முரண்பாட்டு நிலை மோதலாக மாறியுள்ளது.
பொலிஸ் வாகனங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொழுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நெதர்லாந்தில் உணவகங்கள் மற்றும் கடைகளை முன்கூட்டியே மூடுவதற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, விளையாட்டு நிகழ்வுகளில் மக்கள் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.