அமெரிக்காவின் ஜனாதிபதி பொறுப்பை சில மணித்தியாலங்கள் கமலா ஹாரிஸ் ஏற்றுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி , வெள்ளிக்கிழமையன்று வாஷிங்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் தனது வழக்கமான கொலோனோஸ்கோபி பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
இந்த பரிசோதனையின் போது ஜனாதிபதி, ஜோ பைடன் மயக்க மருந்துக்கு உட்படுத்தப்படுவதால் அவர் தனது அதிகாரத்தை ஹாரிஸுக்கு மாற்றுவார் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.
இதனையடுத்து அமெரிக்காவின் தற்காலிக ஜனாதிபதியாக பணியாற்றிய முதல் தெற்காசிய வம்சாவளி பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுகின்றார்.
இவர் ஏற்கனவே அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற முதலாவது தெற்காசிய பெண் என்ற பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளார்.
ஜோ பைடன் ஜனாதிபதியாக தனது முதல் வழக்கமான உடல் பரிசோதனைக்காக வாஷிங்டன் புறநகரில் உள்ள மருத்துவ மையத்திற்கு வெள்ளிக்கிழமை அதிகாலையில் காரில் சென்றார்.
இந்த நடைமுறையின் போது பைடன் மயக்க மருந்துக்கு உட்படுத்தப்படுவார் என்றும், அதிகாரத்தை ஹாரிஸுக்கு மாற்றுவார் என்றும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறினார்.
“அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்றி, ஜனாதிபதி ஜோ பைடன் மயக்க நிலையில் இருக்கும் போது, துணை ஜனாதிபதிக்கு அதிகாரத்தை மாற்றுவார்” , “துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இதன்போது வெஸ்ட் விங்கில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவார்” என செய்திகள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமையன்று 79 வயதாகும் பைடன், அதிபராக பணியாற்றும் மிக வயதான நபர் ஆவார். அவர் தனது 78 ஆவது வயதில் 2019 டிசம்பரில் இந்த பரிசோதனையை இறுதியாக மேற்கொண்டார்.