
photo: Twitter/ Hans Solo
ஜெர்மனியில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் நாளாந்த கொரோனா தொற்று எண்ணிக்கை 65 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.
“நான்காவது கொரோனா அலை எம்மைப் பலமாகத் தாக்கும்” என்று ஜெர்மனின் சான்ஸ்சலர் எஞ்சலா மேர்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஜெர்மனியில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியும் என்ற ஒழுங்குவிதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.
குளிர்காலத்தை எதிர்நோக்கவுள்ள நிலையில், கொரோனா பரவல் தீவிரமடைவது ஆபத்தானது என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.