கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் நிலவும் சூறாவளியுடனான காலநிலை காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வீடுகள், வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சியில் கனேடிய விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மண்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காணாமல் போயுள்ளனர்.
ஆயிரக் கணக்கானோர் இருப்பிடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
போக்குவரத்து தடைப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மக்களுக்கான விநியோகங்களை முன்னெடுக்கவும் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திருப்பவும் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஜட்ஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.