February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உகாண்டா தலைநகரை குறிவைத்து மூன்று தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல் !

உகாண்டா தலைநகர் கம்பாலாவை குறிவைத்து தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டதுடன், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று குண்டுதாரிகள் பாராளுமன்றம் மற்றும் நகரின் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் வீதிகளில் சிதறிக் கிடப்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

காங்கோவை தளமாக கொண்ட ஒரு ஆயுதக் குழுவான நேச நாட்டு ஜனநாயகப் படைகள் இந்த தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

எனினும் இது  தொடர்பில் குறித்த ஆயுதக்குழு கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.