
பெலருஸில் இருந்து போலந்து எல்லையைக் கடக்க முயற்சிக்கும் அகதிகள் மீது போலந்து பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்த ஆயிரக் கணக்கான அகதிகள் போலந்து எல்லையைக் கடந்து, ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில், ஆயிரக் கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களை பெலருஸ் எல்லையில் போலந்து தடுத்து நிறுத்தியுள்ளது.
Now more than ever, Poland must hold the line! 🇵🇱 pic.twitter.com/yViK0PooRl
— Visegrád 24 (@visegrad24) November 13, 2021
புகலிடக் கோரிக்கையாளர்கள் போலந்து பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே, பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதேநேரம், பெலருஸ் குடியரசு புகலிடக் கோரிக்கையாளர்களை தமது எல்லைகளை நோக்கித் தள்ளுவதாக போலந்து குற்றம்சாட்டியுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு போலந்து 12 ஆயிரத்துக்கு அதிகமான எல்லைப் பாதுகாப்புப் படையினரைக் கடமையில் ஈடுபடுத்தியுள்ளது.
ஆயிரக்கணக்கானவர்கள் தமது சிறு குழந்தைகளுடன் போலந்து- பெலருஸ் எல்லையில் வழிமறிக்கப்பட்டுள்ளனர்.