தாய்வானின் சுதந்திரத்தை ஊக்குவிப்பது நெருப்போடு விளையாடுவது போன்றதாகும் என்று சீன ஜனாதிபதி அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் இணையவழி கலந்துரையாடலில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
தாய்வான் விடயத்தில் கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டாலும், சந்திப்பில் இருவரும் இருதரப்பு உறவை மேம்படுத்திக்கொள்வதை வலியுறுத்தியுள்ளனர்.
உலக நாடுகளுக்கிடையிலான பதற்றங்களைத் தணிப்பதற்கான மாநாடு என்பதையும் இருதரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளன.
சீனா தாய்வானை தன்னில் இருந்து பிரிந்துள்ள மாநிலமாகப் பார்ப்பதோடு, தாய்வான் தன்னை ஒரு சுதந்திர தேசமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
சீனா தாய்வானில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதோடு, அமெரிக்கா தாய்வானின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறது.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு நிலவுகின்றது.
இந்தப் பின்னணியில் தான் சீன ஜனாதிபதி ‘தாய்வானின் சுதந்திரத்தை ஊக்குவிப்பது நெருப்போடு விளையாடுவது போன்றதாகும். நெருப்போடு யார் விளையாடினாலும், எரிந்து போவார்கள்’ என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.
பிராந்திய மற்றும் தாய்வானின் அமைதியை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் தாம் எதிர்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.