January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர் கடாபியின் மகன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி

லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர் முஅம்மர் கடாபியின் மகன் ஸைப் அல் இஸ்லாம் அந்நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி லிபிய ஜனாதிபதித் தேர்தலுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ள நிலையில், ஸைப் அல் இஸ்லாம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

லிபியாவில் முஅம்மர் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து ஸைப் அல் இஸ்லாம் மறைந்து, வாழ்ந்து வந்தார்.

நாட்டை மீண்டும் ஒற்றுமைப்படுத்த வேண்டிய தேவை தனக்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸைப் அல் இஸ்லாம் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தமை எதிர்த் தரப்புகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட காலம் மறைந்திருந்தாலும், ஸைப் ஒரு பலமான போட்டியாளராக கருதப்படுகிறார்.

 

 

புதிய செய்திகள்