
பிரித்தானியாவின் லிவர்பூல் நகரில் மகளிர் மருத்துவமனைக்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
காரொன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வாடகை காரொன்றிலேயே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதுடன், அந்தக் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இந்த சம்பவத்தில் காரின் சாரதி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றை சோதனையிட்ட பொலிஸார், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 21, 26 மற்றும் 29 வயதுடைய சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.