தென் அமெரிக்க நாடான எக்குவடோர் குடியரசின் குயாகுவில் நகரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே சனிக்கிழமை இரவு இடம்பெற்ற குழு மோதலில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்தில் 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோதலின்போது இரு கும்பல்களும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தின் பின்னர் அந்த சிறைச்சாலைக்குள் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத ஆயுதங்களை சிறைச்சாலை அதிகாரிகள் மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த சிறைச்சாலையில் அடிக்கடி கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் இடம்பெற்ற மோதலில் 116 கைதிகள் உயிரிழந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று சனிக்கிழமையும் அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டில் செயல்பட்டு வருகிற போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின்’ கட்டளையின் பேரில் தான் இவ்வாறான மோதல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
அங்குள்ள சிறைச்சாலைகளில் இந்த வருடத்திற்குள் இடம்பெற்றுள்ள மோதல்களினால் இதுவரையில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.