நெதர்லாந்தில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் முடக்க நிலையை அமுல்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து நாட்டில் மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய முடக்க நிலை அமுல்படுத்தப்படுவதாக பிரதமர் மார்க் ரூட் அறிவித்துள்ளார்.
உணவகங்கள் மற்றும் கடைகளை முன்கூட்டியே மூடுவதற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, விளையாட்டு நிகழ்வுகளில் மக்கள் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் இருப்பவர்களுக்கு மேலதிகமாக நால்வர் மாத்திரமே ஏனையோரது வீடுகளுக்குச் செல்ல முடியும் என்றும் நால்வருக்கு மேலதிமானவர்கள் செல்லக் கூடாது என்றும் நெதர்லாந்து அறிவித்துள்ளது.
இரவு நேர விடுதிகளை எட்டு வரை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மற்றும் வகுப்புகளை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.