May 23, 2025 10:38:10

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரான்ஸ் பொருட்களை புறக்கணியுங்கள்; துருக்கி ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

பிரான்ஸ் இஸ்லாத்துக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றது என குற்றம்சாட்டியுள்ள துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன்,பிரான்சில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை புறக்கணிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரான்சின் தயாரிப்புகளுக்கு உதவ வேண்டாம் எனவும் அந்த நாட்டின் பொருட்களை வாங்கவேண்டாம் எனவும் நான் எனது பிரஜைகளை கேட்டுகொள்கின்றேன் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி குறித்து துருக்கி ஜனாதிபதி வெளியிட்ட கருத்தினால் கடும் இராஜதந்திர மோதல் உருவாகியுள்ளதுடன், துருக்கிக்கான தனது தூதுவரை பிரான்ஸ் பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ள நிலையிலேயே துருக்கி ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பிரான்சில் மதச்சார்பற்ற விழுமியங்களை பேணப்போவதாகவும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக போராடப்போவதாகவும் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பல நாடுகளில் பிரான்சிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.