அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் பெண்மணியான மலாலா யூசுப்சாய், அஸர் என்பவரை பிரிட்டனில் அவரது வீட்டில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய உயர் செயல்பாட்டு மையத்தின் பொது மேலாளராக அஸர் பணியாற்றுகின்றார்.
இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
குறித்த பதிவில், இன்று எனது வாழ்க்கையில் “ஒரு மதிப்புமிக்க நாள்” “வாழ்க்கையின் பங்காளிகளாக இருக்க அஸரும் நானும் திருமணம் செய்து கொண்டோம்” பிர்மின்காமில், “குடும்பத்துடன் ஒரு சிறிய நிக்கா விழாவில்” எங்கள் திருமணம் நடந்தது என தெரிவித்துள்ளார்.
“உங்களது ஆசியும் வாழ்த்துகளும் தேவை. வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றாக இணைந்து பயணிக்க போவதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என மேலும் கூறியுள்ளார்.
24 வயதான மலாலா யூசுப்சாய், 2012 ஆம் ஆண்டு தலிபான்களால் தலையில் சுடப்பட்டு ஆபத்தான நிலையை எதிர்கொண்டிருந்த போதும் பாகிஸ்தான் பெண் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்தார்.
இதையடுத்து அவருக்கு 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. அத்தோடு உலகத்திலேயே சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையும் தனதாக்கி கொண்டார்.