குழந்தைகளுக்காக விற்கப்படும் சில உணவு பொருட்களில் ஆபத்தான அளவில் சீனி இருப்பதாக பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் சீனிக்கு எதிராக செயற்படும் அமைப்பு ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது.
இந்த சீனியின் அளவு சிறு வயதிலிருந்தே சொத்தை பற்கள் உருவாவதற்கு காரணமாவதாகவும் குறித்த ஆய்வு முடிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் சந்தையில் விற்கப்படும் சிறார்களுக்கான மற்றும் குழந்தைகளுக்கான 73 தயாரிப்புகள் ஊடாக இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, சோதனை செய்யப்பட்ட 27 தயாரிப்புகளில் “உயர்” சீனி அடங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை சீனி அடங்கிய உணவுகளின் தரப்படுத்தலில் “சிவப்பு” பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன.
அதே போன்று 73 தயாரிப்புகளில் ஆறு மட்டுமே “பச்சை” அல்லது “குறைந்த” சீனி உடைய பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
மேலும் 36 தயாரிப்புகளின் பாக்கெட்டில் – 12 மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஏற்ற இனிப்பு தின்பண்டங்கள் என தெரிவிக்கப்பட்ட போதிலும் குறித்த வயதில் சீனி கலந்த உணவுகளை சிறுவர்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பழச்சாறாக இருந்தாலும், சீனி சேர்த்து வழங்கும் போது அது குழந்தைகளுக்கு நல்லதல்ல என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.