
ஐநா பணியாளர்கள் 16 பேர் எதியோபியாவின் தலைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதியோபியாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைத் தொடர்ந்து அங்கு தமது பணியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
டைக்ரே கிளர்ச்சிப் படை எதியோபியாவின் தலைநகரை நோக்கிப் படை எடுத்துள்ளது.
டைக்ரே கிளர்ச்சியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணியாளர்களை எதியோபிய இராணுவத்தின் உதவியுடன் மீட்க எதிர்பார்ப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.
இதுவரையில் 6 ஐநா ஊழியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஐநா ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பில் எதியோபிய அரசாங்கம் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.