October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கனடாவுக்கான தூதுவராகிறார் இலங்கையின் விமானப்படைத் தளபதி!

இலங்கையின் கனடாவுக்கான புதிய தூதுவராக, விரைவில் ஓய்வுபெறவுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்படவுள்ளார்.

கனடா, சுவீடன், நைஜீரியா, சவுதி அரேபியா, நெதர்லாந்து, எகிப்து, போலந்து, தாய்லாந்து மற்றும் கட்டார் ஆகிய 9 நாடுகளுக்கான இலங்கையின் புதிய தூதுவர்களாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் உயர்-பதவிகளுக்கான பாராளுமன்றக் குழுவுக்கு உறுதிப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பரிந்துரை செய்யப்பட்டவர்களின் தகைமைகள் குறித்து பாராளுமன்றக்குழு ஆராயவுள்ளது.

புதிய தூதுவர்களின் விபரம்:

  1. எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் – கனடாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர்
  2. தர்ஷன பெரேரா – சுவீடனுக்கான இலங்கைத் தூதுவர்
  3. ஏ.எம்.ஜே. சாதீக் – நைஜீரியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர்
  4. அஹமட் ஏ. ஜவாத் – சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர்
  5. அருணி ரணராஜா – நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர்
  6. எம்.கே. பத்மநாதன் – எகிப்துக்கான இலங்கைத் தூதுவர்
  7. எல்.ஏ.கே. சேமசிங்க – போலாந்துக்கான இலங்கைத் தூதுவர்
  8. சமிந்தா ஏ. கேலன்னே – தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர்
  9. எம். மபாஸ் மொஹீதின் – கட்டாருக்கான இலங்கைத் தூதுவர்

இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக எவரேனும் அல்லது எந்தவொரு அமைப்பும் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால், 2020 நவம்பர் மாதம் 7-ஆம் திகதிக்கு முன்னர் முறையாகக் கையொப்பமிட்டு, “செயலாளர், உயர்-பதவிகள் பற்றிய குழு, குழுப் பணியகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, என்ற முகவரிக்கு அல்லது 011-2777300 தொலைபேசியின் ஊடாக அல்லது highposts_e@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் உயர்-பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.