
எதியோபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடையும் அபாயம் நிலவுவதாக ஐநா கவலை வெளியிட்டுள்ளது.
டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கிளர்ச்சிப் படை எதியோபியாவின் தலைநகரை நோக்கி முன்னேறி வருகின்ற நிலையில், ஐநா இதனைத் தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க எதியோபிய அரச படை போராடி வருகிறது.
இந்நிலையில், சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்படி ஐநா வலியுறுத்தியுள்ளது.
சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலம் மாத்திரமே உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று ஆபிரிக்க ஒன்றியம் மற்றம் ஐநா சுட்டிக்காட்டியுள்ளது.
கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தை அரசாங்கம் தொடரும் என்று பிரதமர் அபி அஹமத் தெரிவித்துள்ளார்.
ஆயுதக் குழுக்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முன்னாள் இராணுவ வீரர்களை எதியோபியா மீண்டும் பணிக்கு அழைத்துள்ளது.
பாதுகாப்பற்ற நிலைமை அதிகரிப்பதால் தமது பிரஜைகளுக்கு வெளியேறும்படி அமெரிக்கா கடந்த வாரம் கேட்டுக்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.