February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களை பெலருஸ் எல்லையில் தடுத்து நிறுத்தியது போலந்து

நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களை தாம் பெலருஸ் எல்லையில் தடுத்து நிறுத்தியதாக போலந்து தெரிவித்துள்ளது.

மேலும் ஆயிரக் கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் போலந்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் போலந்து குறிப்பிட்டுள்ளது.

பெலருஸ் குடியரசு புகலிடக் கோரிக்கையாளர்களை தமது எல்லைகளை நோக்கித் தள்ளுவதாக போலந்து குற்றம்சாட்டியுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு போலந்து 12 ஆயிரத்துக்கு அதிகமான எல்லைப் பாதுகாப்புப் படையினரைக் கடமையில் ஈடுபடுத்தியுள்ளது.

ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்த அகதிகளே, இவ்வாறு ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர்.

நூற்றுக்கணக்கானவர்கள் தமது சிறு குழந்தைகளுடன் போலந்து- பெலருஸ் எல்லையில் வழிமறிக்கப்பட்டுள்ளனர்.