கிழக்கு ஜனநாயக கொங்கோ குடியரசின் இரண்டு எல்லைக் கிராமங்களை ஆயுதக் குழுவொன்று கைப்பற்றியுள்ளது.
உகண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ள கிராமங்களையே ஆயுதக் குழு கைப்பற்றியுள்ளது.
2012 மற்றும் 2013 ஆண்டுகளில் கொங்கோவின் பெரும் நிலப் பரப்பைக் கைப்பற்றியிருந்த எம்23 என்ற ஆயுதக் குழு மீண்டும் பலம்பெற்றுள்ளது.
ஷன்சூ மற்றும் ருண்யோனி என்ற கிராமங்கள் இப்போது ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.
இதற்கு முன்னர் கொங்கோவின் பல பகுதிகளிலும் இருந்த எம்23 ஆயுதக் குழுவை ஐநா படை விரட்டியடித்தது.
சமாதான முயற்சிகளில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தத் தவறியதால் தாம் மீண்டும் போராட ஆரம்பித்தாக எம்23 குறிப்பிட்டுள்ளது.