July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெக்சாஸ் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 8 பேர் மரணம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 8 பேர் மரணமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் 300 க்கு அதிகமானோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் டெக்சாஸ் அவசர மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இசை நிகழ்ச்சியில் குவிந்திருந்த மக்கள் முன்னோக்கி ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மாரடைப்பு ஏற்பட்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இசை நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.

https://twitter.com/Brave_spirit81/status/1456892382213967874?s=20