கொரோனா வைரஸ_க்கு சிகிச்சை அளிப்பதில் முதலாவது மாத்திரையைப் பயன்படுத்துவதற்கு பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ_க்கு சிகிச்சை அளிப்பதில் மாத்திரையின் வினைத்திறன் மிக்க தன்மை கண்டறியப்பட்ட பின்னரே பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது.
ரிட்ஜ்பேக் பயோ தெரபியூடிக்ஸ், மெர்க் ஷார்ப் மற்றும் டோஹ்ம்ஸ் போன்ற வைரஸ் தடுப்பு சிகிச்சைகளை வீட்டிலேயே மேற்கொள்ளலாம் என்று பிரிட்டன் சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா தடுப்புக்கான மாத்திரையைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கிய முதல் நாடாக பிரிட்டன் கருதப்படுகிறது.
மோல்னுபிராவிர் அல்லது லாகேவ்ரியோ என அழைக்கப்படும் இந்த சிகிச்சை 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு கொரோனா தொற்றியதும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வருட இறுதிக்குள் 10 மில்லியன் மாத்திரைகளைத் தயாரிக்க முடியும் என்று மெர்க் ஷார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.