இங்கிலாந்தின் மிக நீண்ட கால பனிப் பகுதி “300 ஆண்டுகளில் எட்டாவது முறையாக” காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஸ்பிங்க்ஸ் என்று அழைக்கப்படும், கெய்ர்ன்கார்ம்ஸின் ரிமோட் பிரேரியாச்சில் உள்ள பனிப்பகுதியே இவ்வாறு உருகியுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக குறித்த பனிப் பகுதி உருகுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்பிங்க்ஸ் பனிப்பகுதி, 1933, 1959, 1996, 2003, 2006, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் முழுமையாக உருகியுள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
1933 க்கு முன்னர், கடைசியாக 1700 களில் இந்த பனிப் பகுதி முழுமையாக உருகியதாக கருதப்படுகிறது.