ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு நாணயங்கள் பயன்படுத்துவதை தாலிபான் அமைப்பு தடை செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க டொலர் பயன்பாடு பரந்தளவில் காணப்பட்டன.
ஆப்கானியர்கள் ஆப்கானி நாணயத்தைப் பயன்படுத்துவதை தாலிபான் அமைப்பு கட்டாயமாக்கியுள்ளது.
தாலிபான் அமைப்பின் இந்த நடவடிக்கை, சரிவில் இருக்கும் பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் என்று கூறப்படுகிறது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதும் சர்வதேச நிதியியல் உதவிகள் தடைப்பட்டுள்ளன.
ஆப்கானி நாணயத்தைப் பயன்படுத்தத் தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாலிபான்கள் எச்சரித்துள்ளனர்.