அத்தியாவசிய பொருட்களைத் திரட்டி, சேமித்துக்கொள்ளுமாறு சீன அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
நாட்டில் அவசர நிலையொன்று ஏற்பட்டால், அதற்கு முகங்கொடுக்கும் முகமாக இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசரமாக பொருட்களைத் திரட்டிக்கொள்ளுமாறு சீன வர்த்தக அமைச்சு அறிவித்திருந்தாலும், அதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சில பிரதேசங்கள் முடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, வெள்ளப் பெருக்கு மற்றும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டதால் காய்கறி வகைகளின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த அறிவிப்பால் மக்கள் பயத்துடன் போட்டி போட்டுக்கொண்டு பொருட்களைக் கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.