ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் நகரில் உள்ள இராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சர்தாத் தாவூத் கான் மருத்துவமனைக்கு முன்னால் முதலாம் குண்டும் அதற்கு அருகே இரண்டாம் குண்டும் வெடித்துள்ளதாக தாலிபான் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவத்தில் உயிரிழப்புகள் தொடர்பான தகவல்களை தாலிபான்கள் வெளியிடவில்லை.
15 பேரளவில் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நதத் தாக்குதல்களுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்புக் கோரவில்லை.
ஐஎஸ் குழுவொன்று இராணுவ மருத்துவமனைக்கு வந்து பாதுகாப்புப் பிரிவினருடன் ஏற்பட்ட முரண்பாட்டால் இந்தத் தாக்குதலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக பக்தார் செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.