
2030 ஆம் ஆண்டாகும் போது காடழிப்பை முழுமையாக நிறுத்துவதற்கு உலகத் தலைவர்கள் ஊறுதி எடுத்துள்ளனர்.
ஸ்கொட்லாந்தில் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா உலகத் தலைவர்கள் மாநாட்டில் இவ்வாறு உறுதி எடுக்கப்பட்டுள்ளது.
100 க்கு மேற்பட்ட உலகத் தலைவர்கள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் முக்கிய தீர்மானமாக இது கருதப்படுகிறது.
அதிகமான காடழிப்பு இடம்பெறும் பிரேஸிலும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
காடழிப்பை நிறைவுக்குக் கொண்டுவரும் திட்டத்துக்கு இந்த மாநாட்டில் 19.2 பில்லியன் டொலர் நிதியுதவியும் ஒன்றுதிரட்டப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் இந்தத் தீர்மானத்தை சுற்றுச் சூழல் நிபுணர்கள் வரவேற்றுள்ளதோடு, 2014 ஆம் ஆண்டு தீர்மானத்தை நிறைவேற்றத் தவறியதையும் நினைவுபடுத்தியுள்ளனர்.